சனி, 6 ஜனவரி, 2018

விஜய் சேதுபதி

“விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், காமெடின்னு எந்த கேரெக்டர்ல நடிச்சாலும் ரசிகர்கள் ஏத்துக்கிறாங்களே... ரசிகர்களோட பல்ஸை எப்படிப் பிடிக்கிறீங்க?’’

நாமதான் வேற வேற யோசனையில் இருக்கோம். `நாம போன படத்துல இப்படி நடிச்சோம், அடுத்த படத்தில் இப்படி நடிச்சா ரசிகர்களுக்குப் பிடிக்காது... மக்கள் விரும்ப மாட்டாங்க’ன்னு நினைச்சுக்கிறோம். ஆனால், மக்கள் ரொம்பத் தெளிவா இருக்காங்க. முடிஞ்ச அளவுக்கு மக்களோட மனசைத் தொடுற மாதிரியான கேரக்டர்கள் இருந்தால் போதும். 

எல்லாமே இயற்கைதான். இயற்கைகிட்ட சில விஷயங்கள் கேட்கிறேன். அதுவா கொடுக்குது. வாங்கிக்கிறேன்.”

“அப்படி என்னென்ன கிடைச்சிருக்கு?” 

“இயற்கைக்கு நிறைய சக்தி இருக்குங்க. மரம், செடி, கொடி, மனுஷன், புழு பூச்சினு எல்லாருடைய எனர்ஜியாலும் உருவானதுதான் இயற்கை. அதுக்கு நாம பேசினா கேட்கும். அதை அது நமக்குத் திருப்பிக்கொடுக்கும்.  

2001-ல் துபாய்ல இருந்தபோது திடீர்னு ஒருநாள் தூக்கத்திலிருந்து எழுந்து ‘நான் ஒரு நடிகன்... நான் ஒரு நடிகன்...’னு என்னை அறியாமச் சொன்னேன். மீண்டும் அதை தூக்கத்திலேயே திருத்திக்கிட்டு... ‘நான் ஒரு நல்ல நடிகன்... நல்ல நடிகன்’னு சொன்னேன். அப்பெல்லாம் சினிமாவில் நான் இல்லவே இல்லை. 

ஆனால், அது இன்னைக்கு உண்மையாவே நடந்திருக்கு. இது இயற்கையோட சுவாரசியம்தான்னு   நினைக்கிறேன். 

அதனால நாம நினைக்கிறது நடக்கும்

இயற்கையை நம்புங்க. நான் நம்புறேன்.” 


திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...