சந்தையில் சம்பாதித்தவர்கள்
பங்குச் சந்தை வர்த்தகம் என்றாலே பலருக்கும் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் சந்தையின் போக்கை சரியாகக் கணித்து, சரியான நேரத்தில், சரியான முடிவுகள் எடுத்தால் சாமானிய முதலீட்டாளரும் பங்குச் சந்தையில் கோடிகளை பார்க்க முடியும். அப்படியான சில முதலீட்டாளர்கள்தான் இவர்கள். சில நிறுவனங்களின் இவர்கள் வைத்துள்ள பங்குகள் நிறுவனர்களைவிட அதிகமானது...
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா
மொத்த முதலீடு - 8840.80 கோடி
> 49 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா வருமான வரித்துறையில் வேலை பார்த்தவர்.
> 1985 காலகட்டத்தில், சென்செக்ஸ் 150 புள்ளிகளாக இருந்த போதே பங்கு வர்த்தகத்துக்குள் நுழைந்தவர். 1986ல் டாடா டீ நிறுவனத்தின் 5000 பங்குகளை ரூ.43க்கு வாங்கி ரூ.143க்கு விற்பனை செய்தது முதல் லாபகரமான அனுபவம்.
> தனது மனைவி மற்றும் தனது பெயரில் பங்கு வர்த்தகம் செய்ய தனி நிறுவனத்தையே வைத்துள்ளார்.
தற்போதைய முதலீடு
> டைட்டன், லுபின், கரூர் வைஸ்யா வங்கி, ஜியோஜித் பிஎன்பி, ஸ்பைஸ்ஜெட், கிரைஸில்
ஆஷிஷ் தவான்
மொத்த முதலீடு - 755.27 கோடி
> 16 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இவரது முதலீட்டு நிறுவனம் சைரஸ் கேபிடல். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கு வர்த்தக அனுபவம் கொண்டவர்.
> செண்டர் ஸ்கொயர் பவுண்டேஷன் மூலம் தரமான பள்ளிக் கல்வி சேவையில் ஈடுபட்டுள்ளார். அசோக பல்கலைக்கழகம் உருவாக முக்கிய காரணமாக அமைந்தவர்.
> டீச் பார் இந்தியா, செண்டர் பார் சிவில் சொசைட்டி என பல லாப நோக்கமற்ற சேவை நிறுவனங்களில் இயக்குநர் குழுவில் உள்ளார்.
> ஆக்ஸிஸ் வங்கி, யெஸ் வங்கி, ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்.
தற்போதைய முதலீடு
ஜெபி கெமிக்கல்ஸ், கிரீன்லாம் இண்டஸ்ட்ரீஸ், கிரீன் பிளை, மணப்புரம், ராடிகோ கேதான், சைபர் மீடியா, ஃபோர் சாப்ட், சுனில் ஹைடெக் இன்ஜினீயர்ஸ்.
சிவானந்த் சங்கர் மன்கேகர் குடும்பம்
மொத்த முதலீடு - 708.82 கோடி
> எட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். கேதார் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் மூலம் இவரது மனைவி லெக்ஷ்மி மற்றும் மகன் கேதார் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
> பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் பாண்டலூன் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்தவர். பல துணிகர முதலீட்டு கொள்கைகளை எடுக்கக்கூடியவர்.
> யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகளை வாங்கியபோது, தவறான முடிவு என பலர் விமர்சித்தனர். ஆனால் அதை வாங்கி விற்றதில் 85 சதவீதம் லாபம் பார்த்தார். மீடியா வெளிச்சத்தை விரும்பாத பங்கு வர்த்தகர் இவர்.
தற்போதைய முதலீடு
சென்சுரி டெக்ஸ்டைல்ஸ், காக்ஸ் அண்ட் கிங்ஸ், பியூச்சர் ரீடெய்ல், ஹெச்சிஎல் இன்போ சிஸ்டம்ஸ், ஜெயின் இரிகேஷன், ஷாசன் பார்மா.
சட்பால் கத்தார்
மொத்த முதலீடு - 517.11 கோடி
> எட்டு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இவரது முதலீட்டு நிறுவனம் கத்தார் ஹோல்டிங்ஸ். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய குடிமகன்.
> வழக்கறிஞர். இந்திய அரசின் பத்ம விருது பெற்றவர். 2000 ஆண்டில் வழக்கறிஞர் தொழிலிலிருந்து ஓய்வு பெற்று முழுமையாக பங்கு வர்த்தகத்தில் இறங்கினார்.
> இந்தியா தவிர, வியட்நாம், ஹாங்காங், அமெரிக்கா, மத்திய ஐரோப்பா நாடுகளிலும் முதலீடுகள் செய்து வருகிறார்.
தற்போதைய முதலீடு
டிசிபி பேங்க், ஐஐஎப்எல், டிஎப்எல், ஸ்ட்ரெண்டி பெல், பாக்ய நகர் இந்தியா போன்ற நிறுவனங்கள் இவரது போர்ட்போலியோவில் உள்ளது.
நெமீஷ் எஸ் ஷா
மொத்த முதலீடு - 512.51 கோடி
> பத்து நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இவரது முதலீட்டு நிறுவனம் இஎன்எஎம். இவரது போர்ட்போலியோவில் இதற்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், காஸ்ட்ரால், ஹிந்துஸ்தான் யுனிலீவர் போன்ற நிறுவனங்களும் இடம் பெற்றிருந்தன.
தற்போதைய முதலீடு
ஆஷி இந்தியா, லெஷ்மி மெஷின்ஸ், சோனா கோயோ, எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ்.
அனுஜ் ஆனந்த்ராய் சேத்
மொத்த முதலீடு - 485.70 கோடி
> இவரது போர்ட்போலியோவில் பத்து நிறுவனங்கள் உள்ளன. இவரது முதலீட்டு நிறுவனம் அன்வில் (ANVIL). 1989ல் தனது வர்த்தகத்தை தொடங்கியவர். மும்பையில் வசிக்கிறார்.
தற்போதைய முதலீடு
ஆஷி இந்தியா, பண்ணாரி அம்மன் ஸ்பின்னிங், பினோலெக்ஸ், கெப்ரியேல், ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், லெஷ்மி மெஷின் வொர்க்ஸ்.
யூசுப் அலி எம் ஏ
மொத்த முதலீடு - 485.44 கோடி
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகளில் சில்லரை வர்த்தக துறையில் உள்ளார். வங்கித்துறை பங்குகளில் அதிக முதலீடு செய்பவர். கொச்சியில் செயல்பட்டுவரும் லுலு மால் இவருக்குச் சொந்தமானது. மேலும் இரண்டு மாரியாட் ஓட்டல்கள் சொந்தமாக உள்ளன. தெலங்கானாவில் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
தற்போதைய முதலீடு
> தனலெட்சுமி வங்கி, பெடரல் வங்கி, சவுத் இண்டியன் வங்கி.
இவர்களது முதலீடு தினசரி சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாறும்.
Keywords: பங்கு சந்தை விற்பன்னர்கள், சந்தையில் சம்பாதித்தவர்கள், பங்கு சந்தை முதலீடு, பங்கு சந்தை வருமானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக