திங்கள், 12 அக்டோபர், 2020

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது

ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்

ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்

ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. 


மத்தளி ஒன்றுள தாளம் இரண்டுள

அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்

அத்துள்ளெ வாழும் அரசன் புறப்பட்டால்

மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

-திருமந்திரம்

அவ்வை

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் 

சென்றஇடம் எல்லாம் சிறப்பு.


நற்றாமரைக் கயத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல் 

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் கற்பிலா 

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில் 

காக்கை உகக்கும் பிணம்.

-அவ்வை

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

யோகம்

 கர்மபக்தி ராஜஞானப் பாதை செல்லும்

தர்மநியாய தவநெறியில் நாளும்-மர்ம

மாயப் பெருநதியை நீந்திக் கடந்து

காயசித்தி பெற்று வாழ்க!

சனி, 10 அக்டோபர், 2020

அண்டம் பிண்டம்

 அண்டத்தில் உள்ளது உடம் பென்னும்

பிண்டத்தில் செவியுறுவீர் மரணம் எனும்


கண்டத்தில் தப்பிக்க வழி ஒன்றேயப்


பண்டத்தில் கண்ணுறுவோம் இன்றே!

குழாயடி சண்டை

எனக்கு நன்றாகத் தெரியும் 

இதன் பெயர் தண்ணீர்

என்றான் தமிழன்;


இல்லையில்லை 


இதன் பெயர் வாட்டர்


அழுத்திச் சொன்னான்


வெள்ளைக்காரன்;


போடா பைத்தியம்


இதன் பெயர் வெள்ளம்


மாறுபட்டான் மலையாளி;


அதுவுமில்லை இதுவுமில்லை


இதன் பெயர் நீலு 


என்றான் தெலுங்கன்;


உங்களில் எவருக்குமே


தெரியவில்லை


இதன் பெயர் பானி


என்றான் இந்திக்காரன்;


கருத்து வேறுபாடு


கைகலப்பாகியது; 


தண்ணீரோ தன்னைத்தானே


நொந்து கொண்டது.

திருவாசகம்

 திரு வாசகத் தேனமு துண்டேன்

ஒரு வாசக மாயினும் திருவாசகம்

எனச் சொல்வார் நாட்டார் நன்மொழி


மனச் செம்மை தரும் நன்மையாமே!

எஸ்பிபி-க்கு வைரமுத்துவின் இரங்கல் கவிதை

 மறைந்தனையோ

மகா கலைஞனே!

சுரப்பதை நிறுத்திக் கொண்டதா

உன் தொண்டை அமுதம்?

காற்று வெளியைக்

கட்டிப்போட்ட உன் நாவை

ஒட்டிப் போட்டதோ மரணப் பசை?

பாட்டுக் குயில் போனதென்று

காட்டுக் குயில்கள் கதறுகின்றன

ஒலிப்பதிவுக் கூடங்களெல்லாம்

ஓசை கொன்று எழுந்துநின்று

மவுனம் அனுஷ்டிக்கின்றன

மனித குலத்தின் அரைநூற்றாண்டின்மீது

ஆதிக்கம் செலுத்தியவனே!

மண் தூங்கப் பாடினாய்

மலர் தூங்கப் பாடினாய்

கண் தூங்கப் பாடினாய்

கடல் தூங்கப் பாடினாய்

நீ தூங்குமொரு தாலாட்டை

எவர் பாடியது?

மனிதர் பாடவியலாதென்று

மரணம் பாடியதோ?

பொன்மேடை கண்டாய்

பூமேடை கண்டாய்

இந்த உலக உருண்டையை

முப்பது முறை வலம் வந்து

கலைமேடை கண்டாய் என்

கவிமேடை கண்டாய்

கடைசியில் நீ

மண்மேடை காண்பது கண்டு

இடிவிழுந்த கண்ணாடியாய் நெஞ்சு

பொடிப்பொடியாய் போனதே பாலு

நாற்பது ஆண்டுகள் என் தமிழுக்கு

இணையாகவும் துணையாகவும் வந்தவரே!

இன்றுதான் என் பொன்மாலைப் பொழுது

அஸ்தமன மலைகளில் விழுகிறது

என் சங்கீத ஜாதிமுல்லை

சருகாகிப் போகிறது

என் இளைய நிலா

குழிக்குள் இறங்குகிறது

என் பனிவிழும் மலர்வனம்

பாலைவனமாகிறது

காதல் ரோஜாவே

கருகிப் போகிறது

என் வண்ணம்கொண்ட வெண்ணிலா

மரணக் கடலில் விழுந்துவிட்டது

மழைத் துளியை மறக்காத

சாதகப் பறவை போல்

உன்னை நினைத்தே நானிருப்பேன்

ரோஜாக்களை நேசிக்கும்

புல்புல் பறவை போல்

உன் புகழையே நான் இசைப்பேன்

முகமது ரபி-கிஷோர் குமார்

முகேஷ் - மன்னாடே - தியாகராஜ பாகவதர்

டி.எம்.சவுந்தரரராஜன் வரிசையில்

காலம் தந்த கடைசிப் பெரும் பாடகன் நீ

உன் உடலைக் குளிப்பாட்டுவதற்கு

கங்கை வேண்டாம்

காவிரி வேண்டாம்

கிருஷ்ணா வேண்டாம்

கோதாவரி வேண்டாம்

உலகம் பரவிய உன் அன்பர்களின்

ஜோடிக் கண்கள் வடிக்கும்

கோடித் துளிகளால்

குளிப்பாட்டப்படுகிறாய் நீ!

இதோ!

என்னுடையதும் இரண்டு.

- வைரமுத்து

தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம்

தமிழ்நாடு தொழில் முறை தகுதி வாய்ந்த மற்றும் பதிவு பெற்ற யோகா ஆசிரியர்கள் நலச் சங்க வாழ்த்துப் பாடல்:  

தமிழ்நாடு யோகா 

ஆசிரியர் சங்கம்

பதிவு பெற்ற தகுதி வாய்ந்த

நிபுணர்களின் அங்கம் 


நலம் வாழ மகிழ்வுடனே நாம்

உழைப்போம் என்றும் -மக்கள் 

நலம் வாழ மகிழ்வுடனே நாம்

உழைப்போம் என்றும் 


தமிழ்நாடு யோகா 

ஆசிரியர் சங்கம்

பதிவு பெற்ற தகுதி வாய்ந்த

நிபுணர்களின் அங்கம் 


உடல் உள்ளம் உறுதியாக்கி

வளமான வாழ்வை

வாரிவழங்கும் யோகக்கலை

தெய்வீகக் கலையே!


பதஞ்சலி மாமுனிவன் தந்த

பொக்கிஷமாம் இதனை

கரம் குவித்து சிரம் பணிந்து

போற்றிடுவோம் வாரீர்!


ஒற்றுமையாய் நம்சங்கம் 

ஓங்கி வளர்க என்றே 

தொழில் பக்தியுடன் 

தொண்டு செய்வோம் 

எந்நாளும் நன்றே! 


தமிழ்நாடு யோகா 

ஆசிரியர் சங்கம்

பதிவு பெற்ற தகுதி வாய்ந்த

நிபுணர்களின் அங்கம்


நலம் வாழ மகிழ்வுடனே நாம்

உழைப்போம் என்றும் -மக்கள் 

நலம் வாழ மகிழ்வுடனே நாம்

உழைப்போம் என்றும் 


தமிழ்நாடு யோகா 

ஆசிரியர் சங்கம்

பதிவு பெற்ற தகுதி வாய்ந்த

நிபுணர்களின் அங்கம் 


வாழ்க! வாழ்க!!

வாழ்க!வளர்க !!


இயற்றியவர்: பரக்கத் ராஜகம்பீரன்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை என்றி ருந்தேன்;

முட்டவரும் பகைவரிடம்- கேட்ட வார்த்தை 

எங்கும்; எனினும் இப்படி அர்த்தம்

இங்கு தான் அறிந்தேன்.

தாயை ஒழி - இனி ஒரு தாயின் வயிற்றில் பிறப்பதை ஒழி. 

கண்டாரை ஒழி - தானல்லாத பிற காட்சிகள் அனைத்தும் மாயை என்று அறிந்து விவேகம் கொள்.

குரல் அற்ற குரல்

 குரல் அற்ற குரலினைக் கேட்பீர் 

விரல் நுனியில் உலகம் - தரல்

தக்க விஞ் ஞானத்தால் அறிய

ஒக்குமோ மெய் ஞானம்?

கரூர் டூ பேரூர்

 கரூரிலிருந்து புறப்பட்டேன் அலைந்து திரிந்து 

ஊரூராய் சென்றேன் திசைமாறி-பேரூர்

அன்றோ நான் போகவேண்டிய ஊர்

நன்றோ இது வழிப்போக்கனே!

Mission

 The mission of Cell to Soul 

Is to be your Ultimate Goal 

Submission of you to God

Is Admission to Divine Mode.

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஒரு லூசுக் கதை.

 ஒரு லூசுக் கதை.

" யோவ், நீ என்ன லூசா? " என்று ஒருவன் கேட்டான்.
நான் " ஆமா, நான் லூசு தான் " என்றேன்.
" லூசுக்கு எதிர்ப்பதம் என்ன? "
" டைட்டு"
" டைட்டுன்னா? "
" இறுக்கம் "
" இறுக்கம்- னு எதுக்கு சொல்லுவாங்க? "
" ஆங்...முக்கியமா மன இறுக்கம் "
" மன இறுக்கம்-னா? "
" அட இது கூடத் தெரியாதா? டென்ஷன் "
" அப்ப...டென்ஷனா இருக்குறது இறுக்கம். அதாவது டைட்டு. லூசா இருக்குறது தளர்வு "
" ஆமாம் "
" இப்ப சொல்லு...டைட்டா இருக்குறது நல்லதா? லூசா இருக்குறது நல்லதா? "
" அடப் போய்யா... லூசு " என்று சொல்லி விட்டுப் போனான்.

எஸ் பி பாலசுப்ரமணியம்

 


பரம் பொருள் தன்னைத் தானே 
மகிழ்விக்க முடிவு செய்தது
எஸ்பிபி என்ற வடிவம் எடுத்தது
பாடித் தீர்த்தது; போதும் என்று 
நினைத்ததாலோ என்னவோ
நிறுத்திக் கொண்டது.

இதில் நாமென்ன சொல்ல?

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...