சனி, 14 ஜனவரி, 2017

டாடா குரூப் சேர்மன் என். சந்திரசேகரன் - தமிழர் பெருமை

தமிழ்நாட்டில், மோகனூரில், கரும்பு, நெல், வாழை பயிரிடும் ஒரு வக்கீல் விவசாயியின் ( வயது 85 ) மகனாகப் பிறந்து, ஆரம்பத்தில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, கோவையில் சி.ஐ.டி.-யில் அப்ளைடு சயின்ஸஸ் படித்து, திருச்சி ஆர்.ஈ.சி. கல்லூரியில் கணினி சம்பந்தமான மேற்படிப்பு படித்து, ( கவனிக்கவும், இஞ்சினியரிங் அல்ல; நிர்வாகவியல் படிப்பும் அல்ல ! ) படிக்கும்போதே டி.சி.எஸ்.-சில் பயிற்சி மாணவனாகச் சேர்ந்து, பின்னர் அங்கேயே 1987-ல் வேலைக்கும் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அடைந்திருக்கும் உயரம் இது !
எப்பேற்பட்ட உயரம் இது: ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வணிகம், வருடம் ஒன்றில் ஏறத்தாழ ரூ. 25,000 கோடி லாபம், மொத்தம் 3,78,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு ப்ரும்மாண்டமான நிறுவனத்தின் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்! அதுவும் எப்படி? தன்னை முன்நிலைப்படுத்தாமல், எளிமையாக.
இவருடைய அன்ணன் திரு கணபதி சுப்ரமணியன், இதே டி.சி.எஸ்.-ன் COO-ஆகப் பொறுப்பேற்கிறார் இப்போது. இன்னொரு மூத்த சகோதரர் முருகப்பா குழுமத்தின் நிதி இயக்குனராக இருக்கிறார்!
ஆரம்பத்திலிருந்தே ஆங்கில மீடியத்தில் மட்டுமே படிக்காமலேயே, தனியார் பள்ளியில் மட்டுமே படிக்கமலேயே, B.E., B.Tech, M.B.A., படிக்காமலேயே, அடைப்புக்குறிக்குள் ( U.K., U.S.A. ) போடாமலேயே இந்த உயரத்தைத் தொடமுடியும் என நிரூபித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...