ஹாஜா முஹயதீன். ஜே என்பவரின் பதிவை இங்கு தருகிறேன். என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பதனால்! கோவையில் நடந்த கொடூரம் (இரு குழந்தைகள் கடத்திக்கொலை) அறிந்து மனம் பதறி இரண்டு நாட்களாய்த் தூக்கம் வராமல் தவித்தேன். என் ஆதங்கம் இவரின் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.
நம் நாட்டில் இன்று தினசரி நடக்கும் கொலைகளைக் கண்டு யாரும் சட்டை செய்வதில்லை. எங்கோ யாருக்கோ நடக்கிறது. செய்திப் பத்திரிக்கைகள் முனதினம் நடந்த குற்றங்களை பெயர், ஊர், வயது, போட்டோ எல்லாம் போட்டு அடுத்த நாள் காலையில் நமக்கு தெரிவித்துவிடுகிறது. மேலதிக விவரங்களை தர துப்பறியும் பத்திரிக்கைகள் (து!!) காத்திருக்கின்றன.
வாரம் ஒரு முறை வந்துக் கொண்டிருந்த இந்த மாதிரி பத்திரிக்கைகள் குற்றங்கள் பெருகிவருவதால் திணறிப்போய் சமூக சேவையை விரிவு படுத்தி வாரம் இருமுறை ஆக்கிவிட்டன.
இப்படி தினசரி குற்றங்களைக் கேட்டு படித்து பழகிவிட்டதால் ஒரு கிறுகிறுப்பே இல்லாமல் போய்விட்டது. பத்தோடு பதினொன்றாக சொத்துக்கள், பணம் சம்பந்தப்பட்ட கொலைகள் நடப்பதால் நமக்கு அது ஒரு நிறைவைத் தருவதில்லை.
அடுத்து வந்த கள்ளக்காதல், கற்பழிப்பு முதலான பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருந்தன. இதைப் புரிந்து கொண்ட பத்திரிக்கைகள் யார் யாரை வைத்திருந்தான் அது யாருடைய மனைவி எப்படி விஷயம் லீக் அவுட் ஆனது கத்தியால் குத்தினானா? கல்லைத்தூக்கிப் போட்டாளா? போன்று நேரில் பார்த்து (பார்த்தது போலத்தான்!!) விளக்கமாக எழுதி புண்ணியம் தேடிக் கொண்டன.
இன்றைக்கும் இந்த மாதிரி பலான மேட்டர் இல்லாத பத்திரிக்கைகள் பொட்டலம் கட்டத்தான் லாயக்கு. யாரும் வாங்குவதில்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால் செக்ஸ் புக்கை பத்திரமாக துணிக்கு அடியிலும் பெட்டுக்கு அடியிலும் போட்டு வைத்து யாரும் இல்லாதபோது ரகசியமாக எடுத்து படிக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பா நம் முதுகில் டின் கட்டுவார் இந்த மாதிரி பத்திரிக்கைகள் வெளியில் போடடு வைக்கலாம் அந்த வகையில் நமக்கு ஒரு வாய்ப்பு.
அது போகட்டும்.
இந்தப் பதிவு பத்திரிக்கைகள் பற்றியல்ல.
இப்படி கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் லஞ்சம் என்று பத்திரிக்கைகள் நமது மூளைக்குள் ஏற்றி ஏற்றி எல்லாமே சாதாரண நிகழ்வாகிவிட்டது. இது மாதிரி எதைக் கேள்விப்ட்டாலும் நம் ரத்தம் கொதிப்பதில்லை.
ஆனால் சிறிது இடைவெளிக்குப் பிறகு சில நாட்களுக்கு முன்னால் நம் ரத்தம் கொதித்தது. நம் கண்ணில் நீர் வழிந்தது. கோவையில் பணத்துக்காக இரண்டு பிஞ்சு பாலகர்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்த செய்தி கேட்டு நெஞ்சம் துடித்தது.
"இழுத்து வச்சி அறுக்கணும் முதல் தலையை கொய்யணும்" வரை எல்லாருடைய ஆவேசமும் ஒரே மாதிரி இருந்தன.
பதற வேண்டாம்.
குழந்தைகளை பலாத்காரம் செய்து நீரில் மூழ்கடித்து கொன்றது மென்மையான செயல். கை வெட்டுதல், தலையை சீவுதல் போன்ற அரபு நாட்டு இஸ்லாமிய சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை.
அனாவசியமாக குற்றவாளியை கொன்று அவன் திருந்தி வாழ உள்ள வாய்ப்பை கெடுத்துவிட வேண்டாம்.
நம் நாட்டு சட்டம் அதன் கடமையைச் செய்யும். சிறிய தண்டனை கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதன் பிறகு அவன் நம்முடன் ஒன்றாக திருந்தி வாழ்வான். அவன் மட்டும் அல்ல. இதைவிட் மோசமான குற்றம் செய்தவனையும் நம்முடன் திருந்தி வாழ அனுமதிப்போம்.
இன்னும் நிறைய குழந்தைகள் மிச்சமிருக்கின்றன.
நம் முறை வரட்டும்.
அப்போது நிதானமாக பதறுவோம்.
நன்றி: ஹாஜா முஹயதீன். ஜே
http://kanavuoonjal.wordpress.com/
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திருமந்திரம்
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
Guiding light Jayanthi Somasundaram A fading signpost reads ‘Rayavaram 6 km’, directing visitors to a muddy lane. The nondescript, d...
-
ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. மத்த...
-
இயற் பெயர்: புலப்பாக்க சுசீலா பிறப்பு: நவம்பர் 13 1935 (அகவை 75) பிறந்த ஊர்: விஜயநகரம், ஆந்திரா வசிப்பது: சென்னை இவர் தமிழ், தெ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக