நம் பண்டைய இசை முழுக்கப் பக்தி மயமாக இருந்ததில்லை. வள்ளுவனும் கம்பனும் காப்பாகப் பாடியிருக்கிறார்கள். இளங்கோ அப்படிக் கூடப் பாடவில்லை.
ஆனால் கர்நாடக இசை 'பக்தி' என்ற ஒற்றைப் பரிமாண இசையாகவே இன்றுவரை உள்ளது. மக்களைப் பாடுவது என்பது 'நரஸ்துதி' என்று தீட்டு நிலையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாடிய நம் இசை இன்று மகேசனை மட்டுமே பாடுகின்றது.
மக்களைப் பாடுபொருளாகக் கொள்ளாத எந்தக் கலையும் மக்களைச் சென்றடையாது. கர்நாடக இசை பொதுமக்களிடம் அன்னியப்பட்டு இருக்கும் காரணம் இதுதான்.
பக்தியைக் கர்நாடக இசையிலிருந்து பிரிக்கவே முடியாது என்று கர்நாடக இசைக்காரர்கள் கூறுவதின் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த பக்திதான் நம்மை 2000 ஆண்டுகாலமாக அடிமைத்தனத்தில் ஆழ்த்தியுள்ளது.
5 ஆம் நூற்றாண்டு பக்தி காலத்திலிருந்து இந்த இசை அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டுக்கு இழுத்துவர எத்தனையோ பேர் முயற்சித்திருக்கிறார்கள்.
பூதேவர்களின் தெருக்களிலிருந்து மக்கள் வாழும் சேரிக்கு அந்தத் தேர் நகரவே இல்லை.
'ஓர் இந்திய இசைக் கலைஞன் இசையில் இறைவனுடன் ஒன்ற நினைப்பானே ஒழிய, பக்கத்திலுள்ள இன்னொரு மனிதனுடன் இணைய விரும்ப மாட்டான் என்று ஒருமுறை "யகுதி மெனுகின்" சொன்னார்.
நன்றி: திரு. நா. மம்மது, தமிழிசை ஆய்வாளர் - மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக