வியாழன், 14 அக்டோபர், 2010

முகத்தில் அறையும் உண்மை

ளரும் நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி மையம் நடத்திய இவ்வாண்டுக்கான "சர்வதேச பசி அட்டவணையில்" பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் -  நேபாளம், பாகிஸ்தான், சூடான் நாடுகளை விட அதிகரித்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 38 நாட்டு மக்கள் பசி கொடுமை இன்றி உள்ளதால் மீதமுள்ள 88 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வானது எத்தனை சதவிகிதம் மக்கள் போதிய உணவின்றி தவிக்கின்றனர், குறைந்த எடையுள்ள 5 வயதுக்கு உட்பட்ட குறைவான எடையுள்ள குழந்தைகள் மற்றும் குழந்தை இறப்பு ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாய்வின் படி உலகிலேயே மிக மோசமான அளவில் பசி கொடுமையால் பரிதவிக்கும் நாடுகளாக காங்கோ, புருண்டி, காமரோஸ் மற்றும் எரிட்ரியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் இடம் பிடித்துள்ளன. மேற்கண்ட நான்கு நாடுகளிலும் மொத்த மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேலானோர் உணவின்றி கஷ்டப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணங்களாக உள்நாட்டு சண்டை, எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள், முறையற்ற அரசாங்கம் மற்றும் நிர்வாகம் ஆகியவை விளங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அது போல் உலகின் மிக மோசமான பசி கொடுமையால் பரிதவிக்கும் 4 நாடுகளுக்கு அடுத்தபடியாக பசி கொடுமையால் பரிதவிக்கும் 25 நாடுகளாக நேபாள், டான்சானியா, கம்போடியா, சூடான், ஜிம்பாப்வே, புர்கினோ போஸோ, டொகோ, கினியா, ருவாண்டா, டிஜிபோடி, மொசாம்பிக், இந்தியா, பங்களாதேஷ், லைபீரியா, ஜாம்பியா, தைமூர், நைஜர், அங்கோலா, ஏமன், மடகாஸ்கர், ஹைதி, எத்தியோப்பியா ஆகியவை உள்ளன.

உலகில் பசி கொடுமையால் பரிதவிக்கும் 25 நாடுகளின் பட்டியலில் இந்தியாவில் நேபாள், பாகிஸ்தான், சூடானை விட அதிக மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆசியாவின் வல்லரசாக நினைக்கும் இந்தியா, தொழில்நுட்ப வளர்ச்சியில் தன்னிறைவு கண்டுள்ள இந்தியாவில் இன்னும் பசி கொடுமையால் மக்கள் வாடுவது இந்தியாவின் வளர்ச்சி சீராக இல்லை என்பதையே காட்டுவதாக சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.

நன்றி: இனியவன் (இந்நேரம்.காம்)

பின் குறிப்பு:
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 'பதுக்கி இருக்கும் கறுப்புப் பணம் ஜஸ்ட் ஒன்றரை ட்ரில்லியன் டாலர்கள்தான்! ஒரு ட்ரில்லியன் (Trillion) என்பது ஆயிரம் பில்லியன் (Billion). ஒரு பில்லியன் என்பது 100 கோடி. மொத்தமாக சுமார் 50 லட்சம் கோடி! வறுமை நாடா இந்தியா?!

கருத்துகள் இல்லை:

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...