சனி, 30 அக்டோபர், 2010

ஆதலினால் கனவு காண்பீர்!

"கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றது. கனவு காண்பது மிகவும் முக்கியம்,''என சச்சின் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக திகழ்கிறார் இந்தியாவின் சச்சின் (37). ஒருநாள் (17,598), டெஸ்ட் (14,240) என இரண்டிலும் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். இந்த ஆண்டு இவருக்கு சிறப்பானதாக அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம், ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்து சாதித்தார். கடந்த 2002க்குப் பின் மீண்டும் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஐ.சி.சி.,யின் சிறந்த வீரர் விருது, இரண்டு ஆசிய விருதுகளை பெற்றார். இப்படி அசத்திக் கொண்டிருந்தாலும், இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது என்கிறார் சச்சின். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வழியில், கனவுகள் காண வேண்டும் என்கிறார்.

இது குறித்து லண்டன் பத்திரிகை ஒன்றுக்கு சச்சின் அளித்த பேட்டியில் "கனவுகள் இல்லாத வாழ்க்கை சுவையற்றதாக இருக்கும். கனவுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் கனவுகள் இருந்தால் தான், அவற்றை நாம் அடைய முடியும். இந்த கனவுகள் தான் என்னை கடினமாக உழைக்க தூண்டுகிறது" என்று கூறியிருக்கிறார்.

நன்றி: தினமலர் - 30.10.2010

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான்..

ராஜகம்பீரன் சொன்னது…

@ பின்னூட்டமிட்டமைக்கு நன்றி முனைவர். குணசீலன்!

திருமந்திரம்

ஐவர்க்கு ஒருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே.  மத்த...